தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் 1000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (25) கூடிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரம்தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அமைச்சரவை இம்முடிவுக்கு வந்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்பதால் அதனை உடனடியாக நிறைவேற்றவேண்டுமென அமைச்சர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
பெருந்தோட்டத்துறையின் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய குறைந்தபட்ச சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதில் பிரச்சினை காணப்பட்டதோடு, தொழில்தருநர் விரும்பாவிடில் சம்பள நிர்ணய சபையினூடாக அம்முடிவை செயற்படுத்த முடியுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நிதி அமைச்சின் முடிவினை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாக அறிந்த ஜனாதிபதி இந்த அமைச்சரவைகூட்டத்திலேயே அதனை அனுமதிக்கவேண்டுமென கூறியுள்ளார்.
அதன் பிரகாரம் சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் முடிவுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு
