புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி, கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும் கையிலும் கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாகண்டல் பகுதியிலுள்ள தனது வயலை பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டு திரும்பியபோது, நடந்துவரும் பாதையின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து கரடி தாக்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நண்பரின் உதவியுடன் வயல்பகுதியில் இருந்து வெளியேறி, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போது மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அவரை மாற்றியுள்ளனர்.
அண்மையில் பெய்த மழையினால் காட்டில் வெள்ளநிலை வற்றாத நிலை காணப்படுகின்ற நிலையில் காட்டிலுள்ள யானை, கரடிகள் மேட்டு நிலங்கள் நோக்கி வந்து மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக
தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய
கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் பு
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
