தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மட்டும் இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.
எனினும், கல்விப்பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களை இலக்கு வைத்து மாத்திரம் இன்று முதல் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் இன்று முதல் 907 பாடசாலை மாத்திரம் 11ம் தர மாணவர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாதம் 01ம் திகதியிலிருந்து 11ம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக மேல் மாகாணத்தில் 79,000 மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் அவர்கள் தவறவிட்ட கற்றல் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்காக இம் முடிவை எடுத்ததாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந
இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்க
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
