பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜோன்சன்.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது.
மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. ஆனால், பொது ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது.
எனினும் பிற்காலங்களில் பிரித்தானியா பல்வேறு தளர்வுகளை அமுல்படுத்தியது. இதனால் மக்கள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைசர் தடுப்பூசி, அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்தது.
இந் நிலையில்தான் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததோடு அது மிகவும் தீவிரமாக பரவியது.
இதனால் பிரித்தானியா மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டதோடு ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டது. பல்வேறு நாடுகள் பிரித்தானியா உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக இரத்து செய்தது.
உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள போரிஸ் ஜோன்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்க
உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்ப
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ
கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு
உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவல
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்