டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கரோலினா(Carolina Marin) , விக்டர் ஆக்சல்சென்( Viktor axelsen ) மீண்டும் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.
டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பட்மிண்டன் போட்டி பாங்கொக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.
அந்தவகையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான கரோலினா மரின்(ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘முன்னணி’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார்.
கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபனிலும் இதே தாய் ஜூ யிங்கை வீழ்த்தி தான் கரோலினா மகுடம் சூடியது நினைவு கூரத்தக்கது.
இரண்டு வாரங்களில் 2 சம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை வியப்புக்குரிய வகையில் தொடங்கி இருக்கிறேன்’ என்று கரோலினா குறிப்பிட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-11, 21-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்கை பந்தாடி மீண்டும் பட்டத்தை சொந்தமாக்கினார். அடுத்ததாக உலக டூர் இறுதி சுற்று போட்டி இதே பாங்கொக்கில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்
பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி
இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
