எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவத்கு ரஷ்ய ஜனாதிபதி தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் பல மாதங்களாக சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்ட நவல்னிக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன் மொஸ்கோவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களில் இவ்வார இறுதியில் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை அமெரிக்கா கண்டித்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தது.
இந்த சூழலில், உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை
மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்த
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலார
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவி
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்ல
துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்