தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 3 இலட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவில் இருந்து 6 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இந்த வாரம் இலங்கைக்கு வரும் என்றும் இதனை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மறுநாளே ஆரம்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதற்கான இரண்டாம் கட்டம் முதல் கட்டத்திலிருந்து மூன்று வாரங்களின் பின்னர் இடம்பெறும் எனவும் ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
கோவாக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசிகள் நாட்டுக்கு இலவசமாக கிடைக்கும் என்றும் மிகுதி தடுப்பூசிகள் அரசாங்கத்தின் செலவில் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு
