இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 இலட்சம் தடுப்பூசிகள் (டொஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் எயார் இந்தியா விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பித்ததன் பின்னர், முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கக்கூடியதாக இருக்கும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கிடைக்கவிருக்கும் தடுப்பூசி கிடைத்த பின்னர் நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு மிக விரைவில் தடுப்பூசி வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு மணித்தியாலத்தில் 15 தொடக்கம் 20 பேருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் மூலம் இது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்
