More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!
சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!
Feb 01
சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ் நாடு அணி, இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.



மகுடத்திற்கான இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.



இதில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பரோடா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சோலன்கி 49 ஓட்டங்களையும் ஷெத் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



தமிழ்நாடு அணியின் பந்துவீச்சில், மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும் அப்ராஜித், சோனு யாதவ் மற்றும் மொஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தமிழ்நாடு அணி, 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.



இதன்மூலம் 2020-21ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ணத்தை தமிழ்நாடு அணி வென்றது. இது அந்த அணியின் இரண்டாவது சம்பியன் கிண்ணமாகும். இதற்கு முன்னதாக 2006-7ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரில் தமிழ்நாடு அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரி நிசாந்த் 35 ஓட்டங்களையும் பாபா அப்ராஜித் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பரோடா அணியின் பந்துவீச்சில், அடிட் ஷெத், லுக்மான் மெரிவலா மற்றும் பாபாசபீ பதான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக, தமிழ்நாடு அணி சார்பில், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மணிமாறன் சித்தார்த் தெரிவுசெய்யப்பட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய

Sep15

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து

Jan10

ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீரà

Oct18

உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்தà®

Nov09

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவ

Feb05

இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூடà¯

Mar29

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்

Jul09

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே

Mar09

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு மà®

Jul07

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விà

Jan17

 இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சி

Oct25

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்à

Oct24

மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழà

Jan25

டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ

Feb01

         

கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (22:14 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (22:14 pm )
Testing centres