ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணியும் அபுதாபி அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோதர்ன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அபுதாபி அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ கிளார்க் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் லுக் ரைட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நோதர்ன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், ரியாஸ், ஜூனைத் சித்திக், எம்ரிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 124 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நோதர்ன் வோரியஸ் அணி, 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வசீம் முஹமத் 76 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமண்ஸ் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அபுதாபி அணியின் பந்துவீச்சில், ஜெமி ஓவர்டொன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 34 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வசீம் முஹமத் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடை
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
