வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்பதால் தான் அவர் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர். சட்டப் போராட்டம் தொடரும். அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று கூறினார்.
கடந்த 27ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சசிகலா சிறைக்கு சென்றவுடனே கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக கொடியை அவர் பயன்படுத்த உரிமையில்லை என போர்க்கொடியை உயர்த்தினர்.
இந்த நிலையில் தான், அதிமுக கொடியை பயன்படுத்த எல்லா உரிமையும் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததிற்கே இவ்வளவு பிரச்னை என்றால், தமிழகம் வந்தால் அரசியல் களத்தில் ‘ஒரு சம்பவமே காத்திருக்கு’ என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ
சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக
கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர
திமுக அரசு அனைத்து துறைகளிலும்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்
முதல்-அமைச்சர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயி ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்