பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்தார். மதுரையில் அவர் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 கூட்டங்களில் பங்கேற்றார்.
தனி விமானத்தில் மதுரை வந்த நட்டா, தனியார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கியவர், மறுநாள் காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வணங்கினார். மதுரை ரிங் ரோடு வாஜ்பாய் திடலில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இடையில் நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டத்திலும் பங்கேற்றார்.
இதுகுறித்து நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’ஒரே நாளில் 10 பேக் டு பேக் கூட்டங்களில் பங்கேற்று கட்சி தொண்டர்களையும், மதுரை மக்களையும் ஊக்குவித்திருக்கிறார் தலைவர் ஜெ.பி.நட்டா. அவரின் வருகை சிறைந்த உத்வேகத்தினை தந்திருக்கிறது.
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்..அதனால்தான் அவர் எங்களுக்கு தலைவராக கிடைத்திருக்கிறார்’’என்று தெரிவித்திருக்கும் அவர், ‘’உங்கள் கடின உழைபுக்கு என் நன்றி ஜி’’என்றும் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட
இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்
தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்
குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் <
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்
