வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி, செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், வீதியை கடக்க முற்பட்டபோது, மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராச்குமார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்த
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
