இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 தேஜஸ் இலகு ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளது.
பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) சர்வதேச விமானக் கண்காட்சி ஆரம்பமாகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கண்காட்சியைத் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
3 நாட்கள் நடக்கும் இந்த விமானக் கண்காட்சியில் உலகளாவிய விமான நிறுவனங்களான போயிங், லாக்ஹீட் மார்டின், டசால்ட் மற்றும் ஏர்பஸ் தவிர, இந்த நிகழ்ச்சியில் தலேஸ், பிஏ, சிஸ்டம்ஸ் மற்றும் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான MBDA நிறுவனமும் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 83 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த விமானங்கள் 2024ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் தலைவர் மாதவன் கூறியுள்ளார்.
விமானப்படைக்கு 73 எம்கே 1 ஏ ரக தேஜஸ் போர் விமானங்களும் 10 எல்சிஏ தேஜஸ் எம்கே 1 ரக விமானங்களையும் கொள்வனவு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில்
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதம இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982 டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக பள்ளி கல்வி தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத