எகிப்தில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கினைக் கொண்ட மம்மியொன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது .
அந் நாட்டில் அலெக்சாண்ட்ரியா (Alexandria) பகுதியிலுள்ள டபோசிரிஸ் மேக்னா (Taposiris Magna ) என்ற கோயிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே குறித்த மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் பழம்பெரும் கோயில்களில் கடந்த 10 வருடங்களாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 16 புதையிடங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த புதையிடங்களில் பல மம்மிகள் புதைந்திருந்தன. மார்பில் அணிகலன்கள் மற்றும் தலையில் கொம்புகள் வைத்த கிரீடத்தினாலும், மம்மிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவை சரியான முறையில் பதப்படுத்தப்படவில்லை.
அதில் ஒரு மம்மியின் வாயில் தங்க நாக்கு இருந்ததைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்தனர்.
எகிப்து நாட்டு மக்கள் உயிரிழந்தபின் ஒசிரிஸ் என்ற எகிப்து கடவுளுடன் உரையாடுவார்கள் என்று நம்பப்பட்டது. ஒசிரிஸ், எகிப்து நாட்டின் பாதாள உலகின் ஆட்சியாளர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இறந்தபின்னும் ஒசிரிஸுடன் எகிப்து மக்கள் பேசுவார்கள் என்பது அந்நாட்டு முன்னோர்களின் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின்படி, இந்த மம்மிக்கு சொந்த நாக்கு அகற்றப்பட்டு இம்மாதிரியான தங்க நாக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான
ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி
உலகம் : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ்
ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழ
விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத
முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்
கனடாவில் முஸ்லிம் குட
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த