அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ் புளொயிட்(George Floyd) என்பவர் அந் நாட்டுப் பொலிஸ் அதிகாரியொருவரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் இனப்பாகுபாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறித்ததே.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது அமெரிக்க வெள்ளை இன பொலிஸார் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அண்மையில் ரோச்சஸ்டர் (Rochester) மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர்.
அப்போது சிறுமி கட்டுக்கடங்காமல் எதிர்த்து பொலிஸாரைத் தாக்கியதால் அவரைக் கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில் அடித்துள்ளதோடு கைவிலங்கிட்டுள்ளனர்
இச் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கைது செய்த வெள்ளையின காவலரான அன்ரே அண்டர்சன் (Andre Anderson) மீது விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் இச் சம்பவத்தையடுத்து நேற்றைய தினம் குறித்த அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் இதுதொடர்பாக குறித்த அதிகாரி கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தங்களைத் தாக்கியதால் அவரை பத்திரமாக அழைத்துச்செல்ல பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகவும், கறுப்பின சிறுமி என்று பாகுபாட்டை நாங்கள் பார்க்கவில்லை, அவளை வலுக்கட்டயாக அவளை தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.