இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அந் நாட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 26 ஆம் திகதி குடியரசு தினம் அன்று டெல்லிக்குள் விவசாயிகள் நடத்திய ட்ரக்டர் பேரணியில் வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
இந் நிலையில் தற்போது டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் நகருக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க இரும்பு ஆணித் தடுப்புகளையும் கொன்கிரீட் தடுப்புகளையும் பொலிஸார் அமைத்துள்ளனர்.
குறிப்பாக திக்ரியில், போராட்ட களத்திலிருந்து டெல்லி நோக்கி செல்லும் வீதிகளில் முதலில் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்புகளும் அதைத் தொடர்ந்து இரண்டு கொன்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கொன்கிரீட் தடுப்புகளுக்கு இடையே சீமென்து கலவை போடப்பட்டு விவசாயிகள் நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி மக்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு
தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ
சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ
