தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின் மனதை நாம் வென்றிருந்ததோடு சர்வதேச சமூகத்தின் மனதையும் வென்று காட்டியிருந்தோம். ஆனால், இந்த ஆட்சியில் அவற்றை ஏன் சாதிக்க முடியாமல் உள்ளது என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அதைவிடுத்து இன முறுகலை மேலும் வலுவடையைச் செய்யும் விதத்திலும் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் அரசிலுள்ள சிலர் கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதியும் பிரதமரும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் திறம்பட முன்னெடுக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த
கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தி
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
