சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
ஏழு பேர் விடுதலை விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தான் ஏழு பேர் விடுதலை பாதிக்கப்பட்டது.
இவர்களின் விடுதலை குறித்து திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகின்றது. நான் ஆளுநரை சந்திக்கும்போதெல்லாம் ஏழு பேர் விடுதலை குறித்து வலியுறுத்துகிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி, கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
