கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பயிற்சி போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
டென்னிஸ் வீரர்கள் ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு தனிமை முகாமில் 14 நாட்கள் தங்கியிருந்தனர். 14 நாட்களை நிறைவு செய்த பின்னர், வீரர்கள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஹோட்டலில் தனிமை முகாமில் இருந்த 520 டென்னிஸ் வீரர்கள் மற்றும் பணியாளர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தனிமை முகாமில் இருந்து வெளியே வரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பயிற்சி போட்டிகள் இரத்தாகியுள்ளன. எனினும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 8ஆம் திகதி மெல்பேர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ