முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முருகனுக்கு அழகு, திறமை, அறிவு என பல பெயர்கள் உள்ளதுபோல், தமிழ் கடவுள் என அழைப்பதை எவ்வாறு அரசிதழில் வெளியிட முடியும், என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில், இதுபோல் அறிவிப்பது இயலாதது என தெரிவித்த நீதிபதிகள், தேசத்தின் மதச்சார்பின்மையை பாதிக்கும் என்பதால், அரசிதழில் வெளியிட உத்தரவிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ
6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் த
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண
தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர
முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்
தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன
