வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனா அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னாரில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு மூன்றாக உயர்ந்துள்ளதுடன், வடக்கில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒருவர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாய
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல
கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா ச
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
