பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கமும் தனியார் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.
கடந்த தினம் கூடிய சம்பள நிர்ணய சபை, இறப்பர் மற்றும் தேயிலை துறைசார்ந்த பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை 900 ரூபாயாகவும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 100 ரூபாயாகவும் அதிகரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்த நிலையில், சம்பள உயர்வு அதிகரிக்கப்படுவதானது, சிறுதோட்ட உற்பத்தியாளர்களையும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நடத்துகின்றவர்களையும் பெரிதும் பாதிக்கும் என்று குறித்த சங்கங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, சம்பள நிர்ணய சபையின் இந்த தீர்மானத்துக்கான ஆட்சேபனையை முன்வைக்கவிருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களது ஒன்றியமும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான
பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு &nbs
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்
