பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம் தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இப்போது நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார்.
பிங்கர்-4 பகுதி நமது பிராந்தியம். இப்போதுஇஅந்த பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பிராந்தியத்தை பிரதமர் மோடி ஏன் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார்?
சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால் பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார்.
இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் ஒரு கோழை அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் நமது இராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார்.
இராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இவ்வாறு செய்வதை இந்தியாவில் உள்ள யாரும் அனுமதிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங் காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன் இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
