More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!
Feb 13
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று!



 



யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



அவர் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்றுக் குறைவடைந்துள்ளது. எனினும், நேற்று முன்தினமும் நேற்றும் திடீரென தொற்றுறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அச்சுவேலி சந்தைப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் நால்வர் மற்றும் பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளை ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



யாழ். மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. யாழில் இப்போது அனைத்துச் செயற்பாடுகளும் இயல்பு நிலையில் உள்ளது. எனினும் சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



 அச்சுவேலி சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே நேற்று நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.



அச்சுவேலிப் பகுதியில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்கள், வெளி மாவட்டங்களிலுள்ள சந்தையுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். இந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்குச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.



புதிய கொத்தணி உருவாகும் சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்.



குறிப்பாக, பாடசாலைகள், மதத்தலங்கள் ஏனைய பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது க.பொ.த. பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அபாய நிலையை உணர்ந்து பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும்.



அத்தோடு, பேருந்துகளில் பயணிப்போர் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி இடங்களுக்கு செல்வோர் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முச்சக்கர வண்டிச் சாரதிகளும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்., அச்சுவேலி சந்தையினை மூடுவதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில்

Jan26

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ

Feb02

பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான  கிம்புலா எலே குண

Sep20

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட

Jun06

நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள்,  வெளிச்ச

Apr30

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு

Jun08
Mar26

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத

Mar07

அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த

Sep04

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந

Mar09

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்

Jun14

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ

Feb02

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல

Jan18

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட

May10

இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (04:45 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (04:45 am )
Testing centres