உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. அலக்நந்தா மற்றும் தாவ்லி கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரிஷி கங்கை அணை உடைந்து, கரையோரம் உள்ள கிராமங்களிலும் வெள்ளம் பாய்ந்தது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 600 இராணுவ வீரர்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையின் மூன்று ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளன.
‘நிலைமையை மதிப்பிடுவதற்கு ஒரு குழு சம்பவ இடத்திலேயே உள்ளது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.’ என இந்தோ திபெத் எல்லை படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் பாண்டே கூறினார்.
இரண்டு மருத்துவ குழுக்கள் இந்த நடவடிக்கைகளில் சேர்ந்துள்ளன. ஒரு பொறியியல் பணிக்குழு ரிங்கி கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தொடர்ந்து அதிகாரிகளுடன் பேசி நிலைமை குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங
வடமாநிலங்களில் கோலோச்சும்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு. போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய
