நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 352 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியாவிடம் மேலதிகமாக தடுப்பூசிகளை வழங்குமாறு கடந்த வியாழக்கிழமை, இலங்கை கோரியிருந்தது.
இவ்வாறு தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த 500,000 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இலங்கை நன்கொடையாகப் பெற்ற பின்னர், ஜனவரி 29ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.
முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸார் என முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம், பொது மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக
அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய
முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
