மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளர்.
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் தான் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மறைந்த தலைவர் ஜெயலலிதா பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும். அவர் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயன் அடைந்தனர்.
ஜெயலலிதா சிறப்பான நிர்வாகியாகவும், இரக்க குணம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க ஜெயலலிதா அயராது பாடுபட்டார்.
இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக் சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும்
இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற