More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்!
ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்!
Feb 24
ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்!

முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.



இதையடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார்.



பல்வேறு தரப்பினரை தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் புதுச்சேரி வந்து மீனவ மக்களை சந்தித்தார்.



வருகிற 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கிறார். 27-ந் தேதி தனி விமானத்தில் தூத்துக்குடி வரும் அவர், அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.



திறந்த வேனில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். அவர்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.



27-ந் தேதி இரவு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ராகுல்காந்தி பேசுகிறார்.



இதில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபிமனோகரன் செய்து வருகிறார்.



மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் நிறைவு பெறுகிறது. ராகுல்காந்தியின் முழுமையான சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைக்குள் வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ராகுல்காந்தியின் சுற்றுப்பயணத்துக்கு தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இது தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு 3-வது கட்டமாக ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று காங்கிரஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr09

சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாà

Jan30

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நà

Jan28

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக

Jan03

பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய மà

May01

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரà

Jul24

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீà

May02

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிடà¯

Mar29

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020

Jul29

தமிழக பா.ஜ.க. தலைவர் 

தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மà

May05

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வà¯

Jun27

முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான

Aug18

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வà

Sep04

முதல்-அமைச்சர் 

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:28 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:28 am )
Testing centres