மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றும் நோக்கில் தொழில் முயற்சிக்கான உபகரண உதவிகள் செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செயலக சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், வெளிநாட்டு பணியக உத்தியோகத்தர் எஸ்.சயனொளி, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.புலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மீட்சி அமைப்பின் நிதி உதவி மூலம் பாரம்பரிய உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்த எட்டு (08) பெண்களுக்கு உணவு உற்பத்தி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு
சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப
