அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, நாகோன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையில், அசாமில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திலும் புதிய வளர்ச்சி தொடங்கியது. ஒரு காலத்தில், அசாம் என்றாலே கிளர்ச்சி மற்றும் வன்முறைக்கு பெயர் பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்தது. இப்போது வளர்ச்சிக்கான மாநிலமாக மாறியிருக்கிறது.
பிரதமர் மோடி அசாமை கவுரவிக்க எல்லாவற்றையும் செய்தார். பூபென் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தருண் கோகாயும் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
காங்கிரசை வெற்றி பெறச்செய்ய, பாஜகவின் வாக்கு சதவீதத்தை குறைக்க, போராட்டக்காரர்கள் வெவ்வேறு பெயர்களில் போட்டியிடுகின்றனர். காங்கிரசை வெற்றி பெறச் செய்வதே அவர்களின் நோக்கம். அவர்களால் அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கும் அது தெரியும். ஆனால் காங்கிரசை வெற்றி பெறச் செய்வதற்காக, பாஜகவின் வாக்குகளை பிரிப்பதற்கு அவர்கள் முயற்சிப்பது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இ
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல
அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகை
லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட
கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.
மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
