வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி!
வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் பூநகரியில் பணியாற்றும் யாழ். தென்மராட்சி, தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 376 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் இருவருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பஸ்ஸில் பயணித்தவர்களிடம் கேரதீவில் வைத்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர். மற்றையவர் தனங்கிளப்புப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை. இவர் பூநகரியில் பணியாற்றும் நிலையில் பஸ்ஸில் பயணித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 414 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 3 பேருக்குக் கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் கிளிநொச்சி – கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அத்துடன் இவர்கள் கரைச்சியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்களாவர்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிண
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
