தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். கூலி தொழிலாளி. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். முனியம்மாள், கேரளாவில் உள்ள தேயிலை எஸ்டேட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
முனியம்மாளுக்கு உடன் பணிபுரியும் நபருடன் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சந்திரன் கண்டித்ததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை வேலைக்கு புறப்பட்ட முனியம்மாளை பணிக்கு செல்ல வேண்டாம் என்று சந்திரன் வற்புறுத்தி உள்ளார்.
அதனையும் மீறி முனியம்மாள் புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் அங்குள்ள கோழிப்பண்ணையின் அருகே நடந்துசென்ற முனியம்மாளை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த, தேவாரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சந்திரனை தேடி வருகின்றனர்.
இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்
தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்ற
இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா
இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்