ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான கபிஷாவில் உள்ள நிஜிராப் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தலீபான் பயங்கரவாதிகள் ஒரே இடத்தில் கூடியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் 2 படைப்பிரிவுகள் கூட்டாக இணைந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் சரமாரி தாக்குதல் நடத்தினர். ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் 30 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 6 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர
ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர
ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக
உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ள
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை
ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம