More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள்!
 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள்!
Mar 02
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள்!

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள். ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியாக சித்தரித்துள்ளது. காணப்படும் குறைப்பாடுகளினால் அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம். தவறுகளை திருத்திக் கொண்டு பயணிக்கவே எதிர்பார்த்துள்ளோம் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.



சூரியவெல பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நம்பிக்கையற்ற பயனற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் நாட்டு மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மாறாக தேவையற்ற காரணிகள் மாத்திரமே அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.



குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி யார், எவரது தேவைக்காக குண்டுத்தாரிகள் செயற்பட்டார்கள், என்ற விடயங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மாறாக குண்டுத்தாக்குதலில் சூத்திரதாரியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், மற்றும் காவல்துறை மா அதிபர் மற்றும் தேசிய பௌத்த அமைப்புக்களை ஆணைக்குழு சித்தரித்துள்ளது. இது முற்றிலும் தவறான செயற்பாடாகும்.



ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக உள்ளது. ஒரு சிலரது செயற்பாடுகளும், கருத்துக்களும் சுதந்திர கட்சியை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சுதந்திர கட்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியான பின்னர் அரசாங்கத்தில் இருந்து சுதந்திர கட்சி வெளியேறுவது பொருத்தமானது என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.



அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளோம். அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம்.



தவறுகளை திருத்திக் கொண்டு அரசியல் ரீதியில் ஒன்றினைந்து பயணிக்கவே எதிர்பார்த்துள்ளோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கை குறித்து பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த சிறந்த தீர்வை பெற முயற்சிக்கிறோம் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct10

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களà¯

Oct23

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுà®

Mar06

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்à®

Feb09

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுà

Aug05

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண

Apr19

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்à

Oct15

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமà

Mar15

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான

Mar26

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி

Feb06

இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்

Aug31

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கà

Jan24

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ

Oct07

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலà

Sep07

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டà¯

Dec30

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு à

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (07:49 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (07:49 am )
Testing centres