More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - ஜமால் கஷோகியின் காதலி வலியுறுத்தல்!
இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - ஜமால் கஷோகியின் காதலி வலியுறுத்தல்!
Mar 02
இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - ஜமால் கஷோகியின் காதலி வலியுறுத்தல்!

சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையின் பின்னணியில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது.‌ ஆனால் சவுதி அரேபிய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது.



இந்த சூழலில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் இந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது என கூறி சவுதி அரேபியா மறுத்தது.



இந்தநிலையில் ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென கஷோகியின் காதலி ஹேட்டீஸ் செங்கிஸ் வலியுறுத்தியுள்ளார்.‌ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘குற்றமற்ற மற்றும் அப்பாவியான ஒருவரை கொடூரமாக கொலை செய்ய உத்தரவிட்ட பட்டத்து இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அவர் தண்டிக்கப்படாவிட்டால் அது என்றென்றும் நம் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும். நமது மனித குலத்துக்கு ஒரு கறையாக இருக்கும். இது நாம் தேடும் நீதியைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் இது போன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் முடியும்’’ என தெரிவித்துள்ளார். துருக்கியைச் சேர்ந்த ஹேட்டீஸ் செங்கிசை திருமணம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக இஸ்தான்புல்லில் தூதரகத்துக்கு சென்றபோதுதான் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr20

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை à®

Jun12

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைசà

Sep20

உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாà®

Apr11

பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா

Mar07

உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய à

Mar03

உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடிà

May18

சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத

Mar18

யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிகà¯

Apr01

தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுபà

Jan12

உலக அளவில் கோவிட் - 19  தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்à

Mar17

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி எ

Apr17

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான à®

Apr17

வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடு

Mar11

உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப

Mar07

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போரà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:55 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:55 am )
Testing centres