தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில், இன்று மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம், கீழதட்டப்பாறை மற்றும் மேல தட்டாப்பாறை ஆகிய இடங்களில் தனியார் வெடிமருந்து விற்பனை கிடங்குகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெடி மருந்துகள் வாங்கி செல்வர்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, வெடிமருந்து கிடங்குகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வுசெய்த அவர், வெடி மருந்துகளை கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே விற்பனை வேண்டும் என்றும், வருவாய் துறையினரிடம் உரிய சான்று பெற்று வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், முன் பின் தெரியாதவர்களுக்கோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு விற்பனை அவற்றை செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார். இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு எஸ்ஐ நம்பிராஜ், தட்டப்பாறை உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சேலம் தொகுதியில் போட்டிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
