இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு அடுத்தவார முற்பகுதியில் வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாமை நீண்டகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் அதற்கான அனுமதி நேற்றுமுன்தினம் விசேட வர்த்தமானி மூலம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.
இந்த வர்த்தமானியில் கொரோனாவால் மரணிப்பவரின் உடலைத் தகனம் அல்லது புதைக்க முடியும் என்பதுடன், மேலும் பல துணை உத்தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய துணை உத்தரவுகளின்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய, அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
இதற்கமைய நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் வழங்கக்கூடிய உத்தரவுகளுக்கு ஏற்ப சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, அடுத்தவார முற்பகுதியில் புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க
உலகநாயகன் கமல
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்
