பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிம் தொடவத்த முன்னிலையில் இந்த வழக்கு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இரவு, இராஜகிரிய பகுதியில் சந்தீப் குணவர்தன என்ற இளைஞரை விபத்துக்குள்ளாக்கி, அது குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்காது தப்பிச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி சாட்சியமளிக்க வருகை தருமாறு முறைப்பாட்டு தரப்பின் ஒன்று தொடக்கம் ஐந்தாம் இலக்க சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் 20 ஆம் இலக்க சாட்சியாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, நிதி அமைச்சின் செயலாளரையும் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு தொடர்பில் அடிப்படை ஆட்சேபனையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.
மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்
யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த
மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
