விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்படும் என்று திமுக தெரிவித்ததால், தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வந்தபோது, 6 சீட்டு வேண்டாம் தூக்கி எறியுங்கள் என்றுகட்சியினர் ஆவேச முழக்கம் எழுப்பி வந்தனர். ஆனால், வேறு வழியின்றி 6 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அன்றைய தினம் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், சமூக நீதீயை பேசியவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். என் தம்பி இங்கு வர வேண்டியவர். பொறுத்திருந்து பார்ப்போம் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
கமலின் இந்த அழைப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசிக கட்சிக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை திமுக கொடுத்திருக்கிறது என்று கமலுக்கு பதில் கொடுத்தார் வைகோ.
இதையடுத்து திருமாவளவன், விசிக விருப்பமனு பெறுதலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது‘’திமுக தலைமையிலான கூட்டனி கட்டுக்கோப்பான முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றுதான் 6 தொகுதிகளுக்கு உடன்பட்டோம்’’ என்றார்.
அவர் மேலும், ‘’புதிய கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுவதை விட பிரபலமான கட்சியில் 6 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை சிறப்பானதாக கருதுகிறோம்’’ என்று தெரிவித்தவர், ‘’மக்கள் நீதி மய்யம் தலைவரின் அழைப்புக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன் பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்ப ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இ
