வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியில் இருந்து வைரவபுளியங்குளம், புகையிரத வீதி நோக்கி திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை, குருமன்காடு சந்தியில் இருந்து வவுனியா நகரம் நோக்கு புகையிரத வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயது மதிக்கதக்க இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பிக்கப் ரக வாகனம் காயமடைந்தவரை ஏற்றிக் கொண்டு விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து உடனடியாகவே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்த
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
