சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது சுற்றுலா வேன் மோதியதில் அக்கா, தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த சின்ன தம்பியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டி மற்றும் அவரது சகோதரி செல்வி. இவர்கள் இன்று காலை குல தெய்வ கோயிலுக்கு செல்வதற்காக, பெத்துரெட்டிபட்டி நால்ரோடு பகுதியில் நின்றிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்றுகொண்டிருந்த சுற்றுலா வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பாண்டி மற்றும் செல்வி ஆகியோர் மீது மோதியது. பின்னர், அருகில் இருந்த பள்ளத்திற்குள் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே
நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச
அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்
முன்னாள் முதல்-மந்திரி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறை கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய் கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்
