மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, அண்மை காலமாக பள்ளி மாணவ, மாணவிகள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்நிலையில், நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாகாணம் கதுனாவில் இகாபி என்ற நகரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர். அதன்பின், அவர்கள் பெண்கள் உட்பட 30 மாணவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர். இதுதவிர பள்ளிக்கூட ஊழியர்கள் சிலரும் கடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 279 மாணவிகள் கடத்தப்பட்டதும், அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ
சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்ல
அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட
ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புக
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப
சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளி
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திர
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங