சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சவாடி அலுவலர்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தொங்கி கிவைத்து, ஒதுக்கீடு பணியை பார்வையிட்டார.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச் சாவடிகளுக்கும் 3 ஆயிரத்து 472 அலுவலர்களும், கூடுதலாக 696 அலுவலர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 168 பேர் பணியில் ஈடுபட உள்ளதாக கூறினார். இதற்காக அலுவலர்களை சுழற்சி முறையில், மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று முடிந்ததாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, நாளை 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு, 3 மையங்களில் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், தனி வட்டாட்சியர் புஷ்பா தேவி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ
வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட
15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான ப மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுத தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண