மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.
என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வைப்போமென உறுதியளித்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி என்றும் தெரிவிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்வின் போது சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, சேப்பாக்கம் பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் வட்டக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கம் பகுதியில் சென்னை மீன் வியாபாரிகள் சங்கம் – சிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் – மகாத்மா காந்தி மீன் விற்பனை மீனவர் கூட்டுறவு சங்கம் – கனரக வாகன உதிரிபாகங்கள் மற்றும் பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம்,
பேருந்து பாகங்கள்&பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம்-சென்னைவாழ் வடமாநில வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள்-தைக்கா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள்-இளையான்குடி புதூர் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் ஆகியோர் மத்தியில் பேசி ஆதரவு திரட்டினார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்று திமுகவில் முதன்முதலாக பிரச்சாரத்தினை தொடங்கியவர் உதயநிதி ஸ்டாலின். அவர் திமுக சார்பில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது முதல் அத்தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.


