பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) சென்னையில் உடல்நலக்குறைவினால் காலமானார். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு, படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லாபம் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.
முதல் படமான இயற்கை படத்திற்கு தேசிய விருது பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த அவர் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மயக்கமடைந்த அவரை அவரின் உதவியாளர்கள் உடனடியாக மீட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் ஜனநாதனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற தி
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப
விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு ச
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’.
வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
