புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்திட பாடுபடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்திட ஒன்றுபட்டு உழைத்திடுவோம். நம் வெற்றிக் கூட்டணிக்கு பலம் சேர்க்கிற வகையில் தற்போது தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் உண்மையான தர்மயுத்தம் என்பதை ஒவ்வொரு கழக கண்மணிகளும் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன்.
தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கழக உடன்பிறப்புகளுக்கு எதிர்காலத்தில் உரிய வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். 234 தொகுதிகளிலும் நமது கழக வேட்பாளர்களும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும் வெற்றிப்பெற நீங்கள் ஒவ்வொருவரும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உழைத்திட வேண்டும். அமமுக தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான நல்லாட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்திட பாடுபடுவோம்” எனக் கூறினார்.
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட
போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ
வடமாநிலங்களில் கோலோச்சும்
டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
