டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தினம், ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்படும். நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இந்த கொண்டாட்டங்கள், 12-ந்தேதி (நாளை) குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்குகிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற எம்.பி.க்கள் அனைவரும் உதவ வேண்டும். பொதுமக்களை வாகனங்கள் மூலம் தடுப்பூசி மையத்துக்கு அழைத்துவர வேண்டும். தடுப்பூசி மையத்தில் தேவையான ஏற்பாடுகளை செய்வதில் உதவ வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் பிரதமர் மோடியின் திறமையான, உறுதியான தலைமைக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவும் பேசினார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா
தமிழகத்தில்
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே& நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட