More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அரச குடும்பத்தினர் மீதான நிறவெறி குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் மறுப்பு!
அரச குடும்பத்தினர் மீதான நிறவெறி குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் மறுப்பு!
Mar 12
அரச குடும்பத்தினர் மீதான நிறவெறி குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் மறுப்பு!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான ஹாரியும், அவரது மனைவி மேகனும், அரச குடும்பத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினர்.



இதற்கான காரணத்தை வெளியிடாமல் மவுனம் சாதித்து வந்த அவர்கள், சமிபத்தில் பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரேயின் நிகழ்ச்சியில் அதை வெளியிட்டனர். குறிப்பாக இங்கிலாந்து அரச குடும்பத்தில் மேகன் அனுபவித்த சவால்களை அவர்கள் வெளிப்படுத்தினர்.



அதாவது, திருமணமான புதிதில் அரச குடும்பத்தில் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், இதனால் மன அழுத்தம் அதிகரித்து தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டதாக மேகன் அதிர்ச்சி குற்றச்சாட்டை தெரிவித்தார்.



மேலும் ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த மேகன் கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாக அவர்கள் கூறியது உலகின் கவனத்தை இங்கிலாந்து அரச குடும்பத்தை நோக்கி திருப்பி இருக்கிறது.



ஒரு காலத்தில் இங்கிலாந்தின் காலனி நாடுகளாக இருந்த நாடுகள் இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கின்றன. ஹாரி-மேகனின் இந்த குற்றச்சாட்டுகள் இங்கிலாந்து அரச குடும்பத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



இது தொடர்பாக அரச குடும்பத்தினர் யாரும் நேரடியாக பதிலளிக்காத நிலையில், இங்கிலாந்து ராணி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அரச குடும்பத்தினர் மீதான நிறவெறி புகார் அதிர்ச்சி அளிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.



இந்த நிலையில் ஹாரியின் சகோதரருமான வில்லியம் நேற்று முதல் முறையாக தனது தம்பி மற்றும் அவரது மனைவியின் இந்த நிறவெறி புகாரை மறுத்து உள்ளார்.



இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இங்கிலாந்து அரச பரம்பரை ஒரு இனவெறி குடும்பம் அல்ல’ என்று தெரிவித்தார்.



இந்த குற்றச்சாட்டுக்குப்பின் ஹாரியிடம் பேசினீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘இல்லை’ என பதிலளித்த அவர், எனினும் அவரிடம் இது குறித்து பேசுவேன் எனவும் கூறினார்.



ஹாரி-மேகன் தம்பதியின் இனவெறி குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளித்த அரச குடும்பத்து முதல் உறுப்பினர் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug23

: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நிலà

May14

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல

Sep04

ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச

Apr04

அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கà¯

Aug30

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் இந்திய வம்சà

Sep23

பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கதà

Mar02

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச

Oct15

ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுக

May29

சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படுà

Sep06

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபà®

Sep30

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றà

Jul16

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சà

Mar04

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சிà®

Mar12

ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (05:05 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (05:05 am )
Testing centres