தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக, அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்ராஜ் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் விதமாக மாதிரி வாக்குப் பதிவை, ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்தும், தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபேட் கருவி மூலம் அறிந்து கொள்ளும் விதமாகவும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமு
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர
பாராலிம்பிக் உயரம் தாண்டுத
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம
